Posts

Showing posts with the label தம்பதியர் ஒற்றுமை

தம்பதியர் ஒற்றுமை காக்கும் கார்த்திகை சோம வார விரதம்

Image
கார்த்திகை சோமவாரம் : சந்திரனுக்கு சோமன் என்றொரு பெயர் உண்டு. திங்கள் என்றும் சந்திரனைக் கூறுவார்கள். எனவே தான் திங்கட்கிழமையை சோமவாரம் என்று கூறுவார்கள். திங்கள் அன்று சந்திரனின் ஆதிக்கம் நிறைந்து காணப்படும். அதாவது சந்திரனின் ஒளிக்கற்றைகள்  சக்தி மிகுந்ததாக ஆற்றல் மிக்கதாக இருக்கும். எனவே சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சந்திரனுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகின்றது. மேலும் சந்திரன் தோன்றியது கார்த்திகை மாதம் என்பதால் அந்த மாதம் வரும் திங்கட்கிழமைகள் சந்திரனுக்கு உகந்த நாளாகவும் விரதம் இருக்கும் நாளாகவும் போற்றப்பட்டு வருகின்றது. தம்பதியர் ஒற்றுமை: இருமனம் இணையும் திருமண பந்தம் சிறக்க, கணவன் மனைவி ஒற்றுமையே முதற் காரணமாக அமைக்கின்றது. ஒருவரை ஒருவர் பரஸ்பரம் புரிந்து கொண்டும், அனுசரித்து நடந்து கொள்வதன் மூலமும், விட்டுக் கொடுப்பதன் மூலம். கஷ்டமான நேரங்களில் ஒருவரை ஒருவர் அரவணைத்துச் செல்வதும் இல்லற வாழ்க்கையை இனிதாக்கும்.  எங்கோ பிறந்த இரு ஜீவன்கள் இணையும் போது மனம் ஒன்றி வாழ இருவரும் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இவையெல்லாம் நடமுறை வாழ்...