எத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்?
திருமணப் பொருத்தம் பொதுவாக, திருமணத்திற்காக ஒரு ஆணுக்கும், பெண்ணிற்கும் இடையே 10 பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன. பண்டைய காலங்களில் 20 திருமணப் பொருத்தங்கள் பார்க்கப்பட்டு வந்ததாகவும், காலப் போக்கில் அது 11 ஆகக் குறைந்தாகவும் சொல்லப்படுகிறது. ஜாதகப் பொருத்தம் பார்த்து முடிவு செய்யப்படும் திருமணங்கள் தொடர்பாக, 10 பொருத்தங்களைப் பார்ப்பது, தற்காலத்தய வழக்கமாக இருந்து வருகிரது. இந்த 10 திருமணப் பொருத்தங்கள் - உடல், மனம், அன்பு, ஆரோக்கியம், அன்யோன்யம் நிறைந்த நீண்ட மண வாழ்க்கை, கருத்தொற்றுமை, இனிய தாம்பத்திய உறவு, பிள்ளைப் பேறு, குடும்பம், உறவினர்களுடன் நல்லுறவு, செல்வம், வளம், வாழ்க்கைச் சவால்களை எதிர் கொண்டு வென்று, ஒற்றுமையாய் வாழும் திறம் – போன்ற முக்கிய அம்சங்களில், அந்த குறிப்பிட்ட ஆண், பெண் இருவருக்கும் இடையே நிலவும் ஒற்றுமைகளை, அதாவது, பொருத்தங்களை ஆராய்ந்து அறிகிறது. இதன் மூலம், அவர்கள் இருவரும், கணவன் மனைவியாக, ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும், நன்கு குடும்பம் நடத்த உள்ள சாத்தியங்களை நிர்ணயிக்கிறது. இதன் அடிப்படையில், அந்த இருவரது திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. 10 பொருத்தங்கள்