ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பது
ஜாதக கட்டம் - பொதுப் பலன்கள் : ஒரு ஜாதகத்தில் இருக்கும் பன்னிரண்டு கட்டங்கள் மற்றும் அதில் அமைந்திருக்கும் கிரகங்களின் நிலையை வைத்துப் பொதுவான பலன்களைக் கூற முடியும் . கிரகங்கள் எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கும் இயல்பு கொண்டது . ஒரு குறிப்பிட்ட நபரின் ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலை , அந்த குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த போது கிரகங்கள் அமைந்த நிலையை குறிப்பிடும் . இதைக் கொண்டு அந்த நபரின் பொதுவான பலன்களைக் கூற இயலும் . ஆனால் வாழ்வில் நடக்கும் சில நல்ல விஷயங்கள் அதாவது மேற்படிப்பு , வெளிநாடு சென்று படித்தல் , வேலை வாய்ப்பு , திருமணம் , புத்திரப் பேறு போன்றவை எப்போது நடக்கும் என்பதை அறிய இன்னும் சில விஷயங்கள் தேவை . ஏனெனில் பிறந்த போது கோள்கள் அமைந்து இருக்கும் நிலை மட்டுமன்றி தினமும் கோள்கள் இயங்கிக் கொண்டிருக்கும் அதிர்வினால் ஏற்படும் தாக்கங்களும் ஒரு ஜாதகரின் வாழ்வில் முக்கியப் பங்கை வகிக்கும் . மேலும் பிறந்த போது ஒருவரின் ஜாதகத்தில் காணப்படும் தசையும் மாறிக் கொண்டே இருக்கும் . இவற்றையும் நாம் கணக்கில் கொள்ள வ...